“எத்தனை தடைகள் வந்தாலும் அ.தி.மு.க. அரசு நீடிக்கும்” ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
“எத்தனை தடைகள் வந்தாலும் அ.தி.மு.க. அரசு நீடிக்கும்“ என்று சேலத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சேலம்,
சேலம் அருகே கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை 14 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் 15-வதாக மாங்கனி மாவட்டமான சேலத்தில் இன்றைய தினம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத கூட்டம் இந்த விழாவில் இருப்பதை காணமுடிகிறது. தமிழகத்தில் ஒரு தீய சக்தி ஆட்சி செய்து கொண்டு இருந்தது. அந்த தீய சக்தியை அழிக்கவும், தமிழகம் வளம் பெற்றிடவும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு தமிழகத்தில் புரட்சி வெடித்து மக்கள் ஆட்சி உருவானது. தமிழகத்தில் நடைபெற்ற வந்த குடும்ப ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததால் தமிழகம் தலை நிமிர்ந்தது. விவசாயிகளுக்கு நல்வழி பிறந்தது. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது. பெண்கள், இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்ற பாதையில் சென்றனர். உண்மையான கோவில் என்றால் மக்களின் நல்ல உள்ளங்கள்தான். அதனால் மக்கள் உள்ளத்தில் எம்.ஜி.ஆர். நீங்கா இடத்தை பிடித்தார். அவர் ஏழை, எளிய மக்களுக்கு அள்ளி, அள்ளி கொடுத்தார்.
அவர் மக்களுக்கு தேவையான எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார். ஆயிரம் சாதனைகளை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர் எம்.ஜி.ஆர்.. அவரது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை உருவாக்கினார்.
வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்த ஒருவர், தமிழ் மீது தீராத பற்று வைத்திருந்த காரணத்தினால் தான் தமிழ் கற்க வேண்டும் என்றும், அதற்கு ஆசிரியர் ஒருவரை தேர்ந்தெடுத்து அழைத்து செல்லுங்கள் என்றும், ஒரு நண்பரிடம் கூறினார். அதற்கு அவர், வாத்தியார் படம் பார்க்கிறீர்களா? என்று கேட்டார். இதனை தொடர்ந்து அவர் அந்த வெளிநாட்டுக்காரரை எம்.ஜி.ஆர் நடித்த 2, 3 படங்களுக்கு அழைத்து சென்று காண்பித்தார்.
அப்போது அவரது நண்பர் கூறும்போது, வாத்தியார் என்றால் எம்.ஜி.ஆர்.தான். அவரை தான் மக்கள் வாத்தியார்? என்று அழைப்பார்கள் என்று தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் படங்களை பார்த்த அந்த வெளிநாட்டுக்காரர் அன்பு என்றால் என்ன? பண்பு, பாசம், நேசம், பணிவு, துணிவு, வீரம், துயரம், தர்மம், சத்யம், நேர்மை, வாய்மை, தானம் என்றால் என்ன? என்று தெரிந்து கொண்டேன் என்றும், குறவர்களை நேசிப்பது, உரிமைக்காக போராடுவது, நீதிக்கு தலை வணங்குவதை தனது படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். மக்களுக்கு கற்றுக்கொடுத்திருப்பதை தெரிந்து கொண்டேன் என்றும் கூறினார்.
எம்.ஜி.ஆரை மட்டுமின்றி அவரை தொடர்ந்து ஜெயலலிதாவையும் மக்கள் நேசித்தார்கள். அவர் சொன்னதையும் செய்தார். சொல்லாததையும் செய்தார். திட்டங்கள் மக்களுக்காக இல்லை என்றும், மக்களுக்காக திட்டங்கள் என்றும் தெரிவித்தார். தற்போது ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது வழியில் வந்த விசுவாசிகள் நாங்கள் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறோம்.
ஆனால், இந்த ஆட்சி கலைந்து விடும் என்று நினைத்தனர். அதன்பிறகு ஆட்சியை எப்படியாவது கலைக்க முயற்சி செய்தனர். யார் அழுது புரண்டாலும், சித்து வேலை செய்தாலும் இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஒரு முடிவுடன் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தெய்வங்களாக இருந்து இந்த ஆட்சியை வழிநடத்தி வருகிறார்கள். இதனால் அரசு ஒருபோதும் கவிழாது. எத்தனை தடைகள் வந்தாலும் அ.தி.மு.க. அரசு நீடிக்கும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Related Tags :
Next Story