மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது; வாலிபர் பரிதாப சாவு நண்பர் படுகாயம்
கடையம் அருகே மரத்தில் மோட்டர் சைக்கிள் மோதியது. இதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
கடையம்,
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் மேல தெருவை சேர்ந்தவர், காமாட்சி நாதன் மகன் அரிராமன் (வயது 18). அவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த பெரியபாண்டி மகன் சுடலைமுத்து. இவர்கள் இருவரும் ஒரு மோட்டார்சைக்கிளில் பொட்டல்புதூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆழ்வார்குறிச்சி- பொட்டல்புதூர் ரோட்டில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது, மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் அரிராமன் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து இறந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த சுடலைமுத்து, அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story