5 பேர் டெங்கு காய்ச்சலால் அவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கெங்கம்பட்டு கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் காணப்படுகிறது. இதில் திருவண்ணாமலை மாவட் டத்தில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட சுமார் 50 வயது பெண்ணுக்கு டெங்கு அறிகுறிகளுடன் கூடிய மர்ம காய்ச்சல் இருந்தது பரிசோதனையில் டாக்டர் களுக்கு தெரியவந்தது.
சுகாதார துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அந்த பெண்ணின் கிராமமான திருவண்ணா மலையை அடுத்த கெங்கம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட் டிருப்பது தெரியவந்தது.
மருத்துவ குழுவினர்
இதையடுத்து அக்கிராமத் தில் உள்ள மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவி உள்ளதா? என்று ஆய்வு செய்யவும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழு அமைத்து சிகிச்சை அளிக்கவும் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா தலைமையில் வட்டார மருத்துவர் சுபத்ரா, பெரியகுளம் மருத்துவமனை டாக்டர் பிரதீபா ஆகியோர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் கடந்த 4 நாட்களாக கெங்கம்பட்டு கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதில் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப் பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
10 பேருக்கு...
கடந்த 4 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பரிசோதனை செய்தபின் அதில் 6 பேருக்கு சாதாரண காய்ச்சல் என்பது தெரியவந்தது. மீதம் உள்ள 4 பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றும், இந்த கிராமத்தில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story