ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கல்நாதஸ்வர இசை நிகழ்ச்சி
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி 15 ஆண்டுகளுக்கு பிறகு கல்நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கல்லால் செய்யப்பட்ட நாதஸ்வரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. தற்போது ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கல்நாதஸ்வரத்தால் சரஸ்வதி தேவிக்கு நேற்று முன்தினம் மாலை இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நாதஸ்வரத்தை முன்பு குஞ்சிதபாதம்பிள்ளை என்ற வித்வான் வாசித்து வந்தார். இவருக்கு பின்னர் கோவில் நாதஸ்வர வித்வானான என்.சாமிநாதன் (வயது56) வழிபாட்டுக்குரிய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாதஸ்வரம் வாசித்து வருகிறார். ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல்நாதஸ்வரம் மூலம் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று, பக்தர்கள் கோவில் நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இசை நிகழ்ச்சி
நேற்று முன்தினம் மாலை நவராத்திரி விழாவையொட்டி சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது அலங்கார மண்டபத்தில் கல்நாதஸ்வரம் மூலம் இசை நிகழ்ச்சி நடத்த அந்த நாதஸ்வரத்தை கோவில் செயல் அலுவலர் கவிதா, நாதஸ்வர வித்வான் சாமிநாதனிடம் வழங்கினார். இரவு 7 மணிக்கு கல்நாதஸ்வரத்தை சாமிநாதன் வாசித்து இசை நிகழ்ச்சி நடத்தினார். 15 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் கேட்டு ரசித்தனர்.

Related Tags :
Next Story