பெண்ணை தாக்கி 5½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பெண்ணை தாக்கி 5½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Oct 2017 3:45 AM IST (Updated: 1 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணை தாக்கி 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் அருகே தண்ணீர் பந்தல்பாளையத்தை சேர்ந்த தங்கவேலின் மனைவி மல்லிகா(வயது 47). இவர் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிக்கு சென்று வருகிறார். கடந்த 28-ந் தேதி மாலை தண்ணீர்பந்தல்பாளையத்தில் இருந்து புதுப்பாளையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

பி.சி.காலனி அருகே சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென மல்லிகாவின் மொபட்டை காலால் உதைத்து தள்ளிவிட்டனர். இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். மேலும் அவரை தாக்கி மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றனர்.

வலைவீச்சு

இந்த சம்பவத்தில் மல்லிகா பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மொபட்டில் சென்ற பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story