மத்திய அரசின் கைப்பாவையாக புதிய கவர்னர் செயல்படக்கூடாது தொல்.திருமாவளவன் பேட்டி


மத்திய அரசின் கைப்பாவையாக புதிய கவர்னர் செயல்படக்கூடாது தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 1 Oct 2017 4:30 AM IST (Updated: 1 Oct 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் கைப்பாவையாக புதிய கவர்னர் செயல்படக்கூடாது என்று திருச்சியில் தொல்.திருமாவளவன் கூறினார்.

செம்பட்டு,

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக கவர்னருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படாமல் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட்டு, தமிழக அரசியலில் நிலவும் நிலையற்ற தன்மையை சீர் செய்ய வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். டெங்குவை ஒழிக்க மாநில அரசுடன், மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும்.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பதில் மட்டுமே ஒரு கட்சியின் தனிப்பெரும்பான்மை என்ற நிலை மாற வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை நேர்மையாக விசாரிக்க வேண்டும். தமிழக மக்களிடம் தேர்தல் திணிக்கப்படக்கூடாது. அது இயல்பாக நடைபெற வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

அவர்களுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் சாதிய, மதவாத கட்சிகள் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பண மதிப்பிழப்பு விவகாரம், பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என யஷ்வந்த் சின்ஹா கூறியிருப்பதை உட்கட்சி பிரச்சினையாக பார்க்காமல், அதனை சிந்திக்க வேண்டிய விஷயமாக பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story