காவிரி ஆற்றில் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
காவிரி ஆற்றில் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.
பென்னாகரம்,
கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததால் ஐந்தருவிகள், சினிபால்ஸ், பிரதான மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதன்காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 39 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நீர்வரத்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுவதால் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. தொடர் விடுமுறையையொட்டி கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு நேற்று வந்தனர். அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் காவிரி கரையோரம் ஆங்காங்கே குளித்தனர்.
பின்னர் அவர்கள் பார்வை கோபுரம், தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரம் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். மேலும் போலீசார், தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story