டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி
செந்துறை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பரிதாபமாக பலியானாள்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வீராக்கன் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை தேன்மொழி (வயது 5) உஞ்சினி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள். இவளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவரது தாய் செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு சிகிச்சை பெற்றார். மேலும் காய்ச்சல் சரியாகாத நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் காய்ச்சல் குறையாததால் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேன்மொழி சேர்க்கப்பட்டாள். அங்கு பரிசோதனையில் தேன்மொழிக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தேன்மொழி பரிதாபமாக இறந்தாள். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உரிய முறையில் பரிசோதனை செய்திருந்தால் சிறுமியை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் டெங்கு காய்ச்சல் என்று உறுதி செய்யப்படாமல் சிகிச்சை அளித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளாள் என உறவினர் ராமசாமி தெரிவித்தார்.

Related Tags :
Next Story