வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் வளாகத்தை கலெக்டர் சுத்தsம் செய்தார்


வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் வளாகத்தை கலெக்டர் சுத்தsம் செய்தார்
x
தினத்தந்தி 1 Oct 2017 4:27 AM IST (Updated: 1 Oct 2017 4:26 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி முதல் தூய்மையே சேவை என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.

அணைக்கட்டு,

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணத்தில் உள்ள எல்லையம்மன் கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ராமன் கலந்து கொண்டு தூய்மை பணிகளை தொடங்கி வைத்து கோவில் வளாகத்தை சுற்றி உள்ள பகுதிகளையும், குளக்கரை பகுதிகளையும் சுத்தம் செய்தார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

தூய்மையே சேவை பணியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும். இந்த பணியை ஒருவரால் மட்டும் செய்ய முடியாது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவிஆணையர் விஜயா, பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் நிஷாத், கோவில் செயல் அலுவலர்கள் வடிவேல்துரை, பரந்தாமகண்ணன் மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் உமாபதி, கோவில் ஊழியர்கள், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story