ஒழுக்கமிக்கவர்கள் யார்?
‘ஆண்களை விடத் தாங்களே ஒழுக்கமானவர்கள்’ என்பது பெண்கள் எப்போதும் பெருமைப்பட்டுக்கொள்ளும் விஷயம். அது உண்மைதான் என்பது தற்போது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

நேர்மை, ஒழுக்கம் தொடர்பான கேள்விகளுக்குப் பெறப்பட்ட பதில்கள் அடிப்படையில் இந்த ஆய்வு அமைந்தது. இதில்தான், ஒழுக்கத்துக்கு ஆண்களை விடப் பெண்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பலர், கண்டிப்பாக நேர்மைக் கொள்கை உடையவர்களாக இருப்பது தெரியவந்தது.
ரோஜர் ஸ்டீயர் என்ற முன்னணி தத்துவவியலாளர் இந்த ஆய்வை மேற்கொண்டார். இதில், பெண்கள் தங்களின் ஒரு முடிவு பிறர் மீது எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசித்து முடிவெடுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு நபரின் ஒழுக்கம், ஓர் அலுவலகத்தில் நுழையும் போது அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நான்காண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்து தொகுத்திருக்கிறார், ரோஜர். இவர் தனது ஆய்வுக்காக 200 நாடுகளைச் சேர்ந்த 60 ஆயிரம் தன்னார்வப் பங்கேற்பாளர்களிடம் கேள்விகள் கேட்டுப் பதில் களைப் பெற்றார். அந்த 60 ஆயிரம் பேரில் தலைமை நிர்வாகிகள் முதல் அடிப்படைத் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் வரை அடங்குவர்.
ஒவ்வொருவரிடமும், அவர்களைப் பற்றிய பல்வேறு கருத்துகளை மதிப்பிடும்படி கோரப்பட்டது. உதாரணமாக, ‘உங்களின் சக ஊழியர்கள் அல்லது குடும்பத்தினர் உங்களை நேர்மையானவர் என்று எப்போதாவது கூறியிருக்கிறார்களா?’ என்பது போன்ற கேள்விகள்.
நான் எப்போதும் என் மீது பிறர் வைத்திருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடப்பேன், நான் சுய கட்டுப்பாடு மிக்க நபர் போன்ற கருத்துகளை தங்களுடன் பொருத்தி மதிப்பிடும்படியும் பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டது. மொத்தத்தில் இந்த ஆய்வு முடிவு, பெண்களைத் தலைநிமிரச் செய்வதாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவும் ஆண்கள் தலையில் குட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

Related Tags :
Next Story