‘ரெய்டு ஸ்ரீலேகா’
கேரள மாநிலத்தின் முதல் பெண் போலீஸ் டி.ஜி.பி. என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், ஸ்ரீலேகா.
கேரள மாநிலத்தின் முதல் பெண் போலீஸ் டி.ஜி.பி. என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், ஸ்ரீலேகா. இவர் ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி என்ற சிறப்பை பெற்றவர். ஸ்ரீலேகா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். படித்து முடித்துவிட்டு பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். வங்கியிலும் பணி புரிந்திருக்கிறார்.
எனினும் அவருடைய தாயார் மகளை போலீஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக 1987-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரி ஆகிவிட்டார். தற்போது சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் இவர் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பல பதவிகளை வகித்து இருக் கிறார்.
அவற்றுள் மூன்று மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக திறம்பட பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் பணியில் காட்டிய கடமை உணர்வும், துடிப்பான செயல்பாடும் சி.பி.ஐ.யில் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்று கொடுத் திருக்கிறது. சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டாக நான்கு ஆண்டுகள் பதவி வகித்து இருக்கிறார்.
“நான் கேரளாவின் முதல் பெண் டி.ஜி.பி. யாக பதவி உயர்வு பெற்றிருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இதனை என் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். அதற்கு காரணம் என் அம்மாதான். அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர்தான் இந்த நிலைக்கு என்னை அழைத்து வந்தவர்” என்று பூரிக்கிறார்.
ஸ்ரீலேகா சி.பி.ஐ.யில் பணி புரிந்தபோது ‘ரெய்டு ஸ்ரீலேகா’ என்றே அழைக்கப்பட்டிருக்கிறார். 2007-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடந்த பரபரப்பான கொலை வழக்கு ஒன்றில் திறமையாக செயல்பட்டு துப்பு துலக்கியதற்காக அரசிடம் இருந்து ‘மெரிட்டோரியஸ் சர்வீசஸ்’ என்ற விருதை பெற்று இருக்கிறார். ஸ்ரீலேகாவுக்கு எழுத்து ஆர்வமும் அதிகம் இருக்கிறது. ஒன்பது புத்தகங்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீலேகாவின் கணவர் சேதுநாத் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். இவர்களுடைய மகன் கோகுல் எம்.பி.ஏ. படிக்கிறார்.

Related Tags :
Next Story