நீளமான கண் இமை
நீளமான கண் இமைமுடிகளை வளர்த்து ஆச்சரியப்படுத்துகிறார், ஜியான்ஜியா. இவர் கண் இமை முடிகளை 12.4 செ.மீ. நீளத்திற்கு வளர்த்து இருக்கிறார்.

ஜியா தன்னுடைய கண் இமை முடிகள் நீளமாக வளரும் தன்மை கொண்டது என்பதை 2013-ம் ஆண்டில் தான் கூர்ந்து கவனித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து கூந்தலை போல இமை முடியையும் நீளமாக வளர்க்க முடிவு செய்திருக்கிறார். அதற்காக சில கஷ்டங்களையும் எதிர்கொண்டிருக்கிறார். இமை முடிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் முகம் கழுவுவதற்கு சிரமப்பட்டிருக்கிறார். அதனை பராமரிப்பதற்கு தனியாக ஷாம்புவை பயன்படுத்தி வந்திருக்கிறார்.
ஜியா, சீனாவின் ஷாங்காய் பகுதியில் வசிக்கிறார். ஆரம்பத்தில் இவர் பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார். இப்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இவரது நீளமான கண் இமை, உலகின் கண்களை வியப்பால் விரியவைத்திருக்கிறது.

Related Tags :
Next Story