ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் கோபுரம் மீது ஏறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் கோபுரம் மீது ஏறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்கள். இது தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தையும், இந்து கோவிலையும் அவமரியாதை செய்யும் செயலாகும். இச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு மேல்முறையீடு செய்து கடும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் முறையாக காலபூஜைகள், நெய்வேத்தியம் நடைபெறுவதில்லை. இதற்கு அறநிலையத் துறையின் அலட்சியப்போக்கே காரணம். அது ஆகம விதிகளுக்கு முரணானது. இதனால் அரசுக்கும் மன்னருக்கும் பாதிப்பு ஏற்படும்.
இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக சில இயக்கங்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதனை அரசு முறியடிக்க வேண்டும். திரைப்பட இயக்குநர் கவுதமன், ஜெனிவாவில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகப் பேசாமல், இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.