வேளச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
சென்னை வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாகவும், தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு சம்பவம் நடப்பதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் ரோக
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீட்டின் முன் நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாகவும், தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு சம்பவம் நடப்பதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் ரோகித்நாதன் உத்தரவின் பேரில் வேளச்சேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் வேளச்சேரியில் ஒரு மோட்டார் சைக்கிளை 2 பேர் தள்ளிக்கொண்டு வந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள், சென்னையை அடுத்த செம்மஞ்சேரியை சேர்ந்த அஜித்குமார்(வயது 20), வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த மணிகண்டன்(20) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும், வீட்டின் முன் நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும், பின்னர் மெக்கானிக் உதவியுடன், மோட்டார் சைக்கிள் பாகங்களை தனித்தனியாக பிரித்து எடுத்து, அதை விற்று கிடைக்கும் பணத்தில் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அஜித்குமார், மணிகண்டன் இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களுக்கு உடந்தையாக இருந்த வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த மெக்கானிக் ரஞ்சித்குமார்(20) என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 பவுன் தங்க சங்கிலி, 4 செல்போன்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை மீட்டனர்.