தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 2 Oct 2017 4:00 AM IST (Updated: 2 Oct 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில், தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.

கொடைக்கானல்,

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வந்தனர். இந்த நிலையில் நேற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அதில் மோயர்பாயிண்ட், நட்சத்திர ஏரி, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்தன. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து கொடைக்கானல் நகரை நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆனந்தகிரி 4–வது தெரு வழியாக மூஞ்சிக்கல் பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. அந்த பகுதி மிகவும் மேடாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

அந்த பகுதியில் பல வாகனங்கள் நடுரோட்டிலேயே நின்றன. இதனால் இப்பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் பலர் வாகனங்களிலேயே தங்கினர். பகல் நேரத்தில் மேக மூட்டம் நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் பெரிதும் ரசித்து மகிழ்ந்தனர். அத்துடன் லேசான சாரல் மழையும் பெய்தது.


Next Story