பாரதிய கிசான் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி,
கோவில்பட்டி இளையரசனேந்தல் முக்கு ரோடு பகுதியில் நேற்று காலை பாரதிய கிசான் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சேசுநாயக்கர் தலைமை தாங்கினார். பாரதிய மக்கள் இயக்கம் கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கிளை செயலாளர் இன்னாசிமுத்து, பாரதிய மக்கள் இயக்கம் தலைவர் ரவிசந்திரன், பாரதிய கிசான் சங்கம் ஒன்றிய தலைவர் ஜெயராமன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 வருவாய் கிராமங்களின் உள்ளாட்சி நிர்வாகத்தை கோவில்பட்டி ஒன்றியத்தோடு சேர்க்க வேண்டும். கோவில்பட்டி வட்டத்திலேயே மேற்படி கிராமங்கள் தொடர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க மாவட்ட தலைவர் ரெங்கநாயலு சிறப்புரையாற்றினார். மாவட்ட மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள், இயற்கை விவசாயம் ஒன்றிய தலைவர் ரெங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story