முத்துமாலை அம்மன் கோவில் தசரா திருவிழா: சப்பரத்தில் அம்மன் வீதிஉலா
சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஏரல்,
ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவிலில் தசரா திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை இரவு அம்மனுக்கு தசரா சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கற்பக பொன் சப்பரத்தில் நகர் வலம் வந்து மக்களுக்கு காட்சி தந்தார். அப்போது திரளான மக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
அம்மன் நகர் உலா
நேற்று காலையில் அம்மன் சப்பரம் ஏரல் நட்டார் அம்மன் கோவில் வந்தது. அங்கு கோவில் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஏரல் மெயின் பஜார் வழியாக ஏரல் சேனையர் சமுதாய உச்சினிமாகாளியம்மன் கோவிலுக்கு சென்றது. அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மதியம் அம்மன் சப்பரத்தில் பேட்டை பந்தலில் காட்சியளித்தார்.
இரவு அம்மனுக்கு ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின்னர் அம்மன் வீதி உலா புறப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) அதிகாலையில் வீதிஉலா சென்ற அம்மன், சிறுத்தொண்டநல்லூர் கோவில் வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Related Tags :
Next Story