தலைமை ஆசிரியை கொலை: குண்டர் சட்டத்தில் கார் டிரைவர் கைது


தலைமை ஆசிரியை கொலை: குண்டர் சட்டத்தில் கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 2 Oct 2017 3:45 AM IST (Updated: 2 Oct 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் தலைமை ஆசிரியை கொலை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகர் 1-ம் தெருவில் வசித்து வந்தவர் அமல்ராஜ். இவருடைய மனைவி ஜூலியா(வயது59). இவர் பள்ளியக்ரஹாரம் அருகே உள்ள கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஜூலியா படுகொலை செய்யப்பட்டார். மேலும் 2 பவுன் சங்கிலி, செல்போன், ரூ.15 ஆயிரம், கார் ஆகியவையும் திருட்டு போய் இருந்தது.

இது தொடர்பாக தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பர்மாகாலனி திடீர் நகரை சேர்ந்த பழனிவேல் மகனான கார் டிரைவர் நாகராஜ்(வயது25) உள்பட 3 பேரை கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இந்தநிலையில் நாகராஜை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பரிந்துரையின்பேரில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இவற்றை கலெக்டர் அண்ணாதுரை பரிசீலனை செய்து நாகராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Related Tags :
Next Story