சி.எஸ்.எம்.டி. அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து ரெயில் சேவை பாதிப்பு


சி.எஸ்.எம்.டி. அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2017 4:00 AM IST (Updated: 2 Oct 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

சி.எஸ்.எம்.டி. அருகே மின்சார ரெயில் தடம்புரண்ட விபத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர்.

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நேற்று மதியம் 1.40 மணிக்கு கர்ஜத் நோக்கி ஸ்லோ ரெயில் ஒன்று புறப்பட்டது. ரெயில் கிளம்பி அருகே உள்ள ஹஜ் ஹவுஸ் பின்புறம் சென்று கொண்டு இருந்தது. அப்போது, திடீரென ரெயிலின் முன்பகுதி தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. விடுமுறை நாள் என்பதால் விபத்தில் சிக்கிய ரெயிலில் பயணிகள் குறைவாகவே இருந்தனர்.
இந்தநிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தடம் புரண்ட இரண்டு ரெயில் பெட்டிகளை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தால் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ வழித்தடத்தில் எந்த ரெயில்களும் இயக்கப்படவில்லை. ஏற்கனவே நேற்று முல்லுண்டு- மாட்டுங்கா இடையே நடந்த பராமரிப்பு பணிகளால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டு இருந்தது.
மின்சார ரெயில் தடம் புரண்ட விபத்து மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்சேவை பாதிக்கப்பட்டதால் ரெயில்நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. மேலும் ரெயில்சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Next Story