பெங்களூருவில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்
பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சிப்பதாக ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பெங்களூரு,
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பத்திரமாக மீட்டனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில், அவர் பீகாரை சேர்ந்தவர் என்பதும், அவருடைய பெயர் அஜய் (வயது 24) என்பதும் தெரியவந்தது. மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வரும் அஜய் பெங்களூரு வந்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்பது தெரியவில்லை. அவருடைய நடவடிக்கையை பார்த்து அவர் லேசாக மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதற்கிடையே, அவருடைய கையில் பிளேடால் கீறப்பட்ட காயங்கள் இருந்தன. இதனால், அவர் நீல திமிங்கல விளையாட்டு விளையாடி இருக்கலாம் எனவும், விளையாட்டின் கட்டளைப்படி அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். மீட்கப்பட்ட அஜய்க்கு நிமான்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பீகாரில் இருந்து பெங்களூரு புறப்பட்டு உள்ளனர். இதுபற்றி ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story