பொதுமக்கள் பாராட்டும் வகையில் சிறப்பாக பணியாற்ற போலீசார் உறுதி ஏற்க வேண்டும்
பொதுமக்கள் பாராட்டும் வகையில் சிறப்பான முறையில் பணியாற்ற போலீசார் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி கேட்டுக்கொண்டார்.
காரைக்கால்,
பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகள் கடந்த 1-11-1954-ல்தான் இந்தியாவுடன் இணைந்தன. அதன்பிறகு கடந்த 16-8-1963 முதல் இந்திய நீதிமன்ற சட்டங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதியில் பின்பற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து 1-10-1963-ல் புதுச்சேரி காவல்துறை தோற்றுவிக்கப்பட்டது. புதுச்சேரி காவல்துறை உதயமான அக்டோபர் 1-ந் தேதியை ஆண்டுதோறும் காவல்துறை உதயதின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை காரைக்கால் கடற்கரை சாலையில் புதுச்சேரி காவல்துறை உதயதின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி காரைக்கால் தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி காவல்துறை கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். காரைக்கால் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்து புதுச்சேரி காவல்துறை உதயதின உரையாற்றினார்.
விழாவில் போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி பேசியதாவது:-
புதுச்சேரி காவல்துறை உதயதினவிழா புதுச்சேரியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதுபோன்று காரைக்காலில் தற்போது நடத்தப்படுகிறது. காவல் துறையில் பணியாற்றும் அனைவரும் தியாக மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகின்றனர். மக்கள் அனைவரும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ காவல்துறையினரின் பணி மகத்தானது.
போலீசார் அனைவரது ஒத்துழைப்பினாலும் காரைக்கால் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. போலீசார் அனைவரும் பொதுமக்கள் பாராட்டும் வகையில் இன்னும் சிறப்பான முறையில் பணியாற்ற இந்த தினத்தில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு போலீசார், இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை போலீஸ் சூப்பிரண்டு வம் சீதரரெட்டி ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகளும், ஊர்க்காவல்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story