மத்திய அரசு துறைகளில் என்ஜினீயர்களுக்கு 588 பணிகள்


மத்திய அரசு துறைகளில் என்ஜினீயர்களுக்கு 588 பணிகள்
x
தினத்தந்தி 2 Oct 2017 3:22 PM IST (Updated: 2 Oct 2017 3:22 PM IST)
t-max-icont-min-icon

பொறியியல் சேவைப் பணிகள் தேர்வு மூலமாக மத்திய அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள 588 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

த்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு அலுவலர் - அதிகாரி அளவிலான பணியிடங்களை இந்த அமைப்பு தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. மத்திய அரசு துறைகளில் ஏற்படும் என்ஜினீயரிங் துறை சார்ந்த பணியிடங்களை நிரப்ப ‘என்ஜினீரிங் சேவைத் தேர்வு’ என்ற தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2018-ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 588 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் இந்த பணியிடங்கள் உள்ளன. ரெயில்வே துறை, ராணுவ தொழிற்சாலை, சாலைப் பணிகள் துறை, ராணுவம், மத்திய மின்பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் உள்ளன. எந்தெந்த துறையில், என்னென்ன பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-8-2018-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1988 மற்றும் 1-8-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்வித்தகுதி:

சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், எம்.எஸ்சி. வயர்லெஸ் கம்யூனிகேசன் எலக்ட்ரானிக்ஸ், ரேடியோ பிசிக்ஸ், ரேடியோ என்ஜினீயரிங், எம்.எஸ்சி. இயற்பியல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப் படுவார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 23-10-2017-ந்தேதியாகும். முதலில் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். பார்ட்-1, பார்ட்-2 ஆகிய இரு நிலைகளில் விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்ப படிவத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப்பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும். இதற்கான முதல் நிலைத் தேர்வு 7-1-2018 அன்றும், முதன்மைத் தேர்வு 1-7-2018 அன்றும் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். 

Next Story