மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் மின்சாரம் தாக்கி மீனவர் சாவு


மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் மின்சாரம் தாக்கி மீனவர் சாவு
x
தினத்தந்தி 3 Oct 2017 4:00 AM IST (Updated: 3 Oct 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 45). மீனவர்.

ராயபுரம்,

விசைப்படகில் சக மீனவர்களுடன் அவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். 30–ந்தேதி இரவு ஆந்திர எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது ஜெனரேட்டர் அறை அருகே விஜி சென்றபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகி விஜி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவருடைய உடல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இது பற்றி அறிந்து சம்பவ இடத்துக்கு காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விரைந்து வந்து விஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story