தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரம்
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் நேற்று திறந்து வைத்தார்.
ஈரோடு,
தீபாவளி பண்டிகை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொதுமக்கள் ஜவுளி வாங்குவதற்காக ஈரோட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள், பொதுமக்களிடம் இருந்து பணத்தை பறித்து செல்ல அதிக வாய்ப்பு உள்ளதால் ஈரோடு மாநகர் பகுதியில் போலீஸ் துறை சார்பில் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கண்காணிப்பு கோபுரங்கள்
ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நேதாஜி ரோடு, ஆர்.கே.வி.ரோடு ஆகிய பகுதிகளில் 6 கண்காணிப்பு கோபுரங்களும், பஸ் நிலையம், மேட்டூர்ரோடு ஆகிய பகுதிகளில் 5 கண்காணிப்பு கோபுரங்களும் என மொத்தம் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
24 மணி நேரமும்...
கண்காணிப்பு கோபுரங்களில் பணியில் இருக்க தனியாக 24 போலீசார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தொலைநோக்கி கருவி (பைனாகுலர்) மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மாநகர் பகுதியில் 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு, திருடர்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். வருகிற 14-ந் தேதிக்கு மேல் மாநகர் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story