திருச்சி அருகே கார் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் 2 பேர் சாவு


திருச்சி அருகே கார் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 3 Oct 2017 4:45 AM IST (Updated: 3 Oct 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே கார் மோதிய விபத்தில், என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சமயபுரம்,

திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மரியநாதபுரத்தை சேர்ந்த பிரான்சிஸ் லாசர் என்பவரின் மகள் செல்சியா ராணி (வயது 18). இவர் சிறுகனூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல அரியலூர் மாவட்டம் கீழப்பளூர் அண்ணாநகரை சேர்ந்த தனபால் மகள் இலக்கியாவும் (18), அதே கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்து, கல்லூரி திறக்கப்படுவதையொட்டி நேற்று இரவு இருவரும் கல்லூரி விடுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் விடுதியில் இருந்து வெளியில் வந்து, எதிர்புறத்தில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஒரு கார், அவர்கள் இருவர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்சியா ராணியும், இலக்கியாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story