மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம்: டி.டி.வி. தினகரன், புகழேந்தி உள்பட ஆதரவாளர்கள் மீது வழக்கு
மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகித்ததாக டி.டி.வி.தினகரன், புகழேந்தி உள்பட ஆதரவாளர்கள் 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
சேலம் நெத்திமேடு கரியபெருமாள் கரடு பகுதியில் வசித்து வருபவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் (வயது 56). இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் ஆவார். சமீபத்தில் டி.டி.வி. தினகரனால் அ.தி.மு.க. (அம்மா அணி) சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர்.
இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் தலைமையிலான டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் கடந்த 29-ந் தேதி சேலம் தாதகாப்பட்டி உழவர்சந்தை மற்றும் சண்முகாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த துண்டு பிரசுரத்தில் அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.கே.செல்வம், பெங்களூரு கே.வெற்றிவேல், சேலம் மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி ஆகியோரது உருவப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
‘நீட்‘ தேர்வால் தமிழகத்தில் மாணவ-மாணவிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதை விலக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மீனவர்கள் படுகொலை, காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லை பெரியார் அணை பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை, கதிராமங்கலம் பிரச்சினை என எதற்கும் பதறாதவர்கள், இவர் பெயரை கேட்டவுடன் (டி.டி.வி.தினகரன்) பதறுகிறது என்றும், எதையெல்லாம் தமிழர்கள் கேட்கிறார்களோ, அதையெல்லாம் தடுப்பதுதான் பா.ஜனதாவின் சாதனை, தமிழக மாணவர்களின் உயிரையும், உரிமையையும் பறிப்பதுதான் புதிய இந்தியாவா? என்றும், அம்மாவின் கொள்கைகளை அடமானம் வைத்து தமிழக வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் களவாடியவர்களை களை எடுப்போம் என மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்து துண்டு பிரசுரத்தில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
‘நீட்‘ தேர்வு மற்றும் சில பிரச்சினைகளில் தமிழக அரசை விமர்சித்து, சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்த டி.டி.வி.தினகரன் உள்பட சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் அன்னதானப்பட்டி போலீசில் சேலம் அஸ்தம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளர் சரவணன் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் டி.டி.வி.தினகரன், புகழேந்தி, வெற்றிவேல், மாவட்ட செயலாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.கே.செல்வம் (சேலம் புறநகர்), வெங்கடாசலம்(சேலம் மாநகர்) மற்றும் சண்முகம், அல்லிமுத்து, பாபு, கோபால், சூர்யா, ராஜ்குமார், மகேஸ்வரி, கலைவாணி, டாக்டர் சசிகுமார், சந்திரன், சரவணன், சாமிக்கண்ணு ஆகிய 17 பேர், மேலும் அடையாளம் தெரியாத 19 பேர் என மொத்தம் 36 பேர் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதாவது அவர்கள் மீது இ.பி.கோ. சட்டப்பிரிவுகளான 143 (அதிக நபர் கூடுதல்), 120 பி (கூட்டுசதி), 124ஏ (மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுதல்), 153 (வன்முறை துண்டுதல், கலகம்), 500 (அவதூறு பரப்புதல்), 504 (பொது அமைதிக்கு பங்கம்), 506(2) (மிரட்டல்) ஆகிய 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அன்னதானப்பட்டி போலீசார், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று காலை முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், தாதகாப்பட்டியை சேர்ந்த சூர்யா (20), கரியபெருமாள் கரடு கந்தப்பகாலனியை சேர்ந்த சந்திரன் (52), மாணவர் அணி மாநகர செயலாளர் டாக்டர் சசிகுமார் (42) மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி (35) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான 5 பேரும் சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு லிங்கம் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு லிங்கம் உத்தரவிட்டார். கைதானவர்களில் கலைவாணி சேலம் பெண்கள் கிளை சிறையிலும், மற்ற 4 பேரும் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story