மாவட்டம் முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
மாவட்டத்தில், காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்,
காந்தி ஜெயந்தியையொட்டி, நேற்று பல்வேறு இடங்களில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சிலைக்கு கமிஷனர் மனோகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில இலக்கிய அணி செயலாளர் ஜோதி ராமலிங்கம், மாவட்ட செயலாளர்கள் சுமதி, கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காமராஜர் நினைவு தினம்
இதைதொடர்ந்து, காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவருடைய சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல திண்டுக்கல் மாவட்ட பெருந்தலைவர் காமராஜர் தேசிய பேரவை சார்பில், மாவட்ட தலைவர் ராமு.ராமசாமி தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு, தமிழ்நாடு காந்தி மன்ற இயக்க மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பொதுச்செயலாளர் மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சின்னாளப்பட்டி
சின்னாளப்பட்டி காமராஜர் பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கனகராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், காந்தி சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். சின்னாளபட்டி நகர காங்கிரஸ் சார்பில் காந்திஜெயந்தி, பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி, கொடிகாத்த திருப்பூர் குமரன் ஆகியோரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதற்கு நகர காங்கிரஸ் தலைவர் நடூர் கனகராஜ் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை தலைவர் ராமுராமசாமி உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து காமராஜர் உருவ படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கொடைக்கானல்
கொடைக்கானல் ஏரிச்சாலையில் காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் டி.ஜி.வினய் கலந்துகொண்டு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, நகராட்சி ஆணையாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் நகர தலைவர் சையது இபுராகிம், மாவட்ட பொதுச்செயலாளர் அமராவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை
நிலக்கோட்டையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி, பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நடராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கோகுல்நாத் மகாத்மா காந்தி, காமராஜர் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் திருப்பதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story