அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்


அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2017 4:02 AM IST (Updated: 3 Oct 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் ரத்த பரிசோதனை கருவி பழுதடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பு இல்லை எனக்கூறியும் நேற்று காலை பா.ஜ.க. சார்பில் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு உழவர்கரை மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் சோமசுந்தரம், ஏம்பலம் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story