சிவ்ரியில் பிரபல தாதாவின் மகன் ரெயில் மோதி பலி


சிவ்ரியில் பிரபல தாதாவின் மகன் ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 4 Oct 2017 4:00 AM IST (Updated: 4 Oct 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

மும்பை, சிவ்ரி– வடலா இடையேயான தண்டவாள பகுதியில் படுகாயங்களுடன் வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக நேற்று முன்தினம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மும்பை,

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் படுகாயங்களுடன் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பிணமாக மீட்கப்பட்ட வாலிபர் விரார் பகுதியில் வசித்து வந்த கித்தேஷ்(வயது 32) என்பது தெரியவந்தது. இவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயில் மோதி பலி ஆகி உள்ளார்.

கித்தேசுக்கு பரேல் பகுதியில் சொந்தமாக பல கடைகள் உள்ளன. எனவே அவர் கடை வாடகையை வசூல் செய்ய அடிக்கடி பரேல் வருவார். கித்தேஷின் தந்தை பிரபல தாதா சந்திரகாந்த் கோபடே ஆவார். இவர் பரேல் சன்மில் காம்பவுண்ட் பகுதியில் கோல்டன் என்ற ரவுடி கும்பலின் தலைவராக செயல்பட்டவர்.

மேலும் நிழல் உலக தாதா ஹாஜி மஸ்தான் மற்றும் வரதராஜன் முதலியார் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்.


Next Story