புனேயில் உயிரிழந்த புளியம்பட்டி ராணுவ வீரர் உடல் அடக்கம் செய்யப்பட்டது
புனேயில் உயிர் இழந்த புளியம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் உடல் நேற்று ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள மேல பூவாணி கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன். இவருடைய மனைவி பஞ்சவர்ணம். இவர்களுடைய மகன் சிங்கராஜ் (வயது 38). இவர் தனது 20 வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணமாகி ரேகா (34) என்ற மனைவியும், 4 வயதில் ஆஜித்ராஜ் என்ற மகனும், 2 வயதில் ஜோஸ்லின் மேரி என்ற மகளும் உள்ளனர். சிங்கராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று புனேயில் 11-வது பட்டாலியனில் தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சிங்கராஜ் ராணுவ முகாமில் இருந்து வாகனத்தில் சென்ற போது, அந்த வாகனத்தின் கதவு திறந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரிகள், அவருடைய மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவருடைய உடல் புனேயில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மனைவியிடம் ஒப்படைப்பு
அங்கு இருந்து புனே ராணுவ கமாண்டர் பரமேசுவரர் தலைமையில் ராணுவ வாகனத்தில் அவருடைய உடல், நேற்று காலை 6.15 மணிக்கு மேல பூவாணி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவருடைய உடல், மனைவி ரேகாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சிங்கராஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
உடல் அடக்கம்
நேற்று காலை அவருடைய உடல் 9.30 மணிக்கு மேல பூவாணி கிராமத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 21 ராணுவ வீரர்கள் அவரின் உடலுக்கு மரியாதை செய்தனர். அரசு சார்பில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயாஸ் அருள், துணை தாசில்தார் முருகேசன், வருவாய் ஆய்வாளர் மைக்கேல், கிராம நிர்வாக அலுவலர்கள் சண்முகநாதன், ரமேஷ், புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராஜ், முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநில தொண்டரணி செயலாளர் பூவாணி லட்சுமண பாண்டியன் தலைமையில், தெற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், முன்னாள் மண்டல செயலாளர் பட்டவராயன், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேல பூவாணி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனால் மேல பூவாணி கிராமம் சோகத்தில் மூழ்கியது.

Related Tags :
Next Story