வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்
மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் நேற்று வெளியிட்டார். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்பட்டியலில் 20 லட்சத்து 37 ஆயிரத்து 563 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் திருத்தங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டு, இறந்த வாக்காளர்கள் பெயர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் நீக்கப்பட்டது.
இந்த நிலையில் வருகிற 1-1-2018-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்கும் பொருட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்படுவதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா பெற்றுக்கொண்டார்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 20 லட்சத்து 50 ஆயிரத்து 219 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 16 ஆயிரத்து 872 பேர், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 33 ஆயிரத்து 253 பேர், மூன்றாம் பாலினத்தவர் 94 பேர் உள்ளனர். சட்டமன்றதொகுதிவாரியாக பார்க்கையில் அதிகபட்சமாக புவனகிரி தொகுதியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 901 வாக்காளர்களும், குறைந்த பட்சமாக நெய்வேலி தொகுதியில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 862 பேரும் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் இந்த மாதம் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளதால், வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளதா? என சரிபார்த்துக்கொள்ளுமாறு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கேட்டுக்கொண்டு உள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால் அதற்குரிய படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 1-1-2018-ந்தேதி அன்று 18 வயது நிரம்பியவர்கள்(31-12-1999-க்கு முன்பு பிறந்தவர்கள்) படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சிறப்பு கிராமசபை கூட்டங்கள் வருகிற 7 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. மேலும் படிவங்கள் பெற சிறப்பு முகாம்கள் வருகிற 8 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிடப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
அப்போது சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சண்முகம், தேர்தல் பிரிவு தாசில்தார் செந்தில் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story