ஆழ்துளை கிணற்றுக்கு கண்ணீர் அஞ்சலி குடிநீர் கேட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்
ஈரோடு அருகே ஆழ்துளை கிணற்றுக்கு கண்ணீர் அஞ்சலி குடிநீர் கேட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்
ஈரோடு,
ஈரோடு அருகே கூரப்பாளையம் ஊராட்சி ராயபாளையம் ஏரிமேடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அங்கு காவிரி ஆற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சரிவர தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர். எனவே குடிநீர் வசதி செய்துகொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.4¼ லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின் மோட்டார் பொருத்தப்பட்டது.
வறட்சி காரணமாக புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்தும் தண்ணீர் வரவில்லை. எனவே பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் காலிக்குடங்களுடன் ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் ‘ஆழ்குழாய் கிணற்றுக்கு கண்ணீர் அஞ்சலி’ என்ற அறிவிப்பை எழுதி வைத்தனர்.இதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆழ்துளை கிணற்றுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி மரியாதை செலுத்தி ஒப்பாரி வைத்தனர். பின்னர் குடிநீர் வசதி வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. காவிரி ஆற்று கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீர் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 2 குடங்கள் மட்டுமே கிடைக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது.
அந்த மின்மோட்டாரை சரிசெய்து கொடுக்கும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் மின்மோட்டாரை சரிசெய்யாமல் ரூ.4¼ லட்சம் செலவில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதில் தண்ணீர் வரவில்லை. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.
அதற்கு போலீசார், “ஈரோடு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் உங்களது கோரிக்கைகளை தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தனர். இருந்தாலும் பொதுமக்கள் போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் பொதுமக்கள் போலீசாரின் உறுதியை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் நூதன போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story