கோவில் விழாவில் வாணவெடி வெடித்து சிதறியதில் தொழிலாளி சாவு மேலும் 4 பேர் படுகாயம்
சுரண்டை அருகே கோவில் விழாவில் வாணவெடி வெடித்து சிதறியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுரண்டை,
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது கடையாலுருட்டி மஜரா பஞ்சாயத்து. இங்குள்ள காளியம்மன், மாரியம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 8-ந் திருநாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது.
சுரண்டை-வீரசிகாமணி மெயின் ரோட்டில் அம்மன் சப்பரத்துக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் வாணவெடி வெடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுரண்டை அருகே உள்ள வரகுணராமபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகா கணபதி(வயது 57), வாணவெடிகளை வெடித்தார்.
சாலையோரத்தில் உள்ள ஒரு கடையின் வாசலில் வைத்து வாணவெடிகளை வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வெடியில் இருந்து பறந்த தீப்பொறி அங்கு வைக்கப்பட்டு இருந்த மற்ற வாணவெடிகளின் மீது பட்டது.
கண் இமைக்கும் நேரத்தில் மற்ற வாணவெடிகள் வெடித்து சிதறியது. இதில் அருகில் நின்று கொண்டிருந்த மகாகணபதி மீதும் வெடி சிதறல்கள் விழுந்தன. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
மேலும் வாணவெடியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாம்பவர் வடகரையை சேர்ந்த சுரேஷ், செங்கோட்டையை சேர்ந்த ஜம்புலிங்க சாமி, கடையாலுருட்டியை சேர்ந்த ராம்குமார்(17), முருகன்(17) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வாணவெடி விபத்தின்போது கடையின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவரும் இடிந்து விழுந்தது. இதுகுறித்து சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
வெடி வெடித்ததில் இறந்த மகாகணபதிக்கு முப்பிடாதி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கோவில் திருவிழாவில் வாணவெடி வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story