வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தஞ்சை மாவட்டத்தில் 19½ லட்சம் வாக்காளர்கள்
தஞ்சை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 19½ லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.
தஞ்சாவூர்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தஞ்சை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் 9 லட்சத்து 57 ஆயிரத்து 526 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 93 ஆயிரத்து 55 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர் 73 பேரும் என மொத்தம் 19 லட்சத்து 50 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர். இது தஞ்சை மாவட்ட மக்கள் தொகையில் 76.38 சதவீதமாகும். தஞ்சை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இன்று(நேற்று) முதல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,175 வாக்குச்சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
அனைத்து வாக்காளர்களும் தாங்கள் வாக்களித்து வரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதை சரி பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற படிவம் 6-யை அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் அவரிடமே வருகிற 31-ந் தேதி வரை அளிக்கலாம்.
பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-யையும், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்ய படிவம் 8-யையும் பூர்த்தி செய்து அளிக்கலாம். அதே தொகுதியில் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டியது இருந்தால் படிவம் 8ஏ-யை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வருகிற 8 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, சரவணன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், பா.ஜனதா மாநகர தலைவர் விநாயகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் செந்தில்குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கரிகால்சோழன், பகுஜன்சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் அரங்கராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story