மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு
சீராப்பள்ளியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
சீராப்பள்ளி பேரூராட்சியில் இருந்த மதுக்கடை கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இந்த கடையை சீராப்பள்ளியில் இருந்து வடுகம் செல்லும் சாலையில் அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சீராப்பள்ளியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, கலெக்டர் ஆசியா மரியத்திடம் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :-
சீராப்பள்ளியில் இருந்து வடுகம் செல்லும் சாலையில் காட்டுக்கொட்டாய் பகுதியில் மதுக்கடை அமைக்க உள்ளதாக அறிகிறோம். சீராப்பள்ளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதி முழுவதும் கோவில்கள் நிறைந்த பகுதியாகும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வோர் இந்த வழியை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
கைவிட வேண்டும்
இங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. மேலும் இந்த பகுதியில் அதிக அளவில் மயில்களும் வசித்து வருகின்றன. அவற்றிற்கும் பாதிப்பு ஏற்படும். எனவே வடுகம் செல்லும் சாலையில் காட்டுக்கொட்டாய் பகுதியில் மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story