வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது அதிகாரி அறிவுரை
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எந்த அரசியல் கட்சியினருக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது என்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மணிகண்டன் அறிவுரை கூறினார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள 156 வாக்குச்சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளரான மணிகண்டன், நேற்று காரைக்காலுக்கு வருகை தந்தார். டணால் தங்கவேலு கலையரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மணிகண்டன் கலந்துகொண்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றும் நீங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளர்கள். எனவே நீங்கள் அனைவரும் நேர்மையாகவும், நடுநிலையுடனும் செயல்படவேண்டும். எந்த அரசியல் கட்சியினருக்கும் ஆதரவாக செயல்படக் கூடாது.
சில இடங்களில் 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் பலர் தேர்தல் அடையாள அட்டைகளை வைத்துள்ளனர். அது சட்டப்படி தவறு. 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு மட்டுமே வாக்காளர்களாக சேருவதற்கான விண்ணப்ப படிவத்தை வழங்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர்களாக சேர்க்க வேண்டியது அவசியமாகும். அவர்கள் நம்மை தேடி வருவார்கள் என்று எதிர்பார்த்திருக்கக் கூடாது. உங்களது பகுதிகளில் வீடு வீடாகச்சென்று 18 வயது நிரம்பியவர்கள் யாராவது வாக்காளர்களாக பதிவு செய்யாமல் விடுபட்டுள்ளார்களா? என்பதை கண்டறிந்து அவர்களை வாக்காளர்களாக சேர்க்க வேண்டும்.
அதுபோல் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் ஒருவர் ஓர் ஆண்டுக்கு மேலாக அந்த வீட்டில் வசிக்கவில்லை என்பது தெரியவந்தால் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து இங்கு திருமணம் ஆகியோ அல்லது வேலை நிமித்தமாகவோ குடியிருப்பவர்கள் தமிழக பகுதியிலும், இங்கும் அடையாள அட்டைகளை வைத்திருப்பார்கள். அதுபோன்று வந்தவர்கள் மற்றும் இறந்து போனவர்கள் குறித்த விவரங்களை தாசில்தாருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். தாசில்தார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கேசவன், கூடுதல் கலெக்டர் மங்களாட் தினேஷ், வாக்காளர் பதிவு அதிகாரிகள் பன்னீர்செல்வம், ரேவதி, தாசில்தார் பொய்யாதமூர்த்தி, தேர்தல் அலுவலக கண்காணிப்பாளர் புஷ்பநாதன், பக்கிரிசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மணிகண்டன் பார்வையிட்டார். அப்போது 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும், வாக்காளர்கள் ஒவ்வொருவரின் வாக்கும் வலிமை வாய்ந்தது என்பதால், தகுதியான நபருக்கு தங்களது வாக்கை தேர்தலின்போது பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Tags :
Next Story