துளிகள்
டுவிட்டர் சமூக வலைத்தளம் குறுஞ்செய்திகளாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியால் பிரபல மடைந்த ஒன்றாகும்.
டுவிட்டரில் மாற்றம் : டுவிட்டர் சமூக வலைத்தளம் குறுஞ்செய்திகளாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியால் பிரபல மடைந்த ஒன்றாகும். 140 வார்த்தைகளுக்குள் கருத்துகளையும், பதிலுரைகளையும் வெளியிடும் முறையை அறிமுகம் செய்ததால், ‘நறுக்’ தகவல்களால் மக்கள் மனதில் இடம் பிடித்தது. இதற்கு இணைய தளத்தின் எஸ்.எம்.எஸ். வலைத்தளம் என்ற பெயருண்டு. தற்போது டுவிட்டரின் இந்த வார்த்தைக் கட்டுப்பாட்டு அளவு இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் 280 வார்த்தைகளில் கருத்துகளை டுவிட்டரில் பதிவிடலாம். வார்த்தைகள் அளவு அதிகரித்துள்ளதால், டுவிட்டர் பயனாளர்களின் கருத்து பகிர்வுகள் இன்னும் சூடு பிடிக்கும் என்று நம்பலாம்.
இதயத்துடிப்பே குறியீடு : கை ரேகைகளையும், எண்களையும் ரகசிய குறியீடுகளாக பயன்படுத்தி வருகிறோம். சிறிது காலத்திற்கு முன்பு இதயத்துடிப்பையும் பாஸ்வேர்டாக பயன்படுத்த முடியும் என்று அறியப்பட்டது. தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் ‘ஐபோன் எக்ஸ்’ மாதிரி போன்களில் இதயத்துடிப்பை பாஸ்வேர்டாக பயன்படுத்த முடியும். அமெரிக்காவின் பபல்லோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த பாஸ்வேர்டு நுட்பத்தை கண்டறிந்தனர் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
ராட்சத ராக்கெட் : அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி ஆய்வு மையம், ஆகாயம் போல விண்வெளிக்கும் சாதாரணமாக சென்று திரும்பும் ராக்கெட்டை வடிவமைத்து வருவதாக அதன் மூத்த நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கூறி உள்ளார். இதுவரை ராக்கெட்டுகள் விண்கலங்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் வேலையை மட்டுமே செய்து வந்தன. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் ராக்கெட்டுகளே விண்கலம்போல விண்வெளியிலும் பயணிக்கும் வகையில் தயாராக தொடங்கிவிட்டது. “நிலவு மற்றும் செவ்வாய்க்கு நிறைய விஞ்ஞானிகளை சுமந்து சென்று திரும்பும் வகையில் 110 அடி உயர பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருவதாக” எலான் கூறினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.
புதிய ஒப்பந்தம் : அமெரிக்காவின் அதிபர் தேர்தலில், ரஷியாவின் தலையீடு இருந்ததாக ஒருபுறம் புகார் உள்ளது. ஆனால் மறுபுறம் அமெரிக்காவும் ரஷியாவும், விண்வெளி ஆராய்ச்சியில் ஒன்றிணைந்து செயல்படுவதாக கடந்த வாரம் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. உலகின் முதல் விண்கலமான ஸ்புட்னிக் பறந்த 60-ம் ஆண்டு நினைவையொட்டி இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விண்வெளிக்கு எல்லை இல்லை என்பதை இந்த ஒப்பந்தம் நினைவூட்டுவதாக நிபுணர்கள் கருத்துகூறி உள்ளனர்.
Related Tags :
Next Story