கூட்டு சேரும் துகள் ரோபோக்கள்


கூட்டு சேரும் துகள் ரோபோக்கள்
x
தினத்தந்தி 4 Oct 2017 2:28 PM IST (Updated: 4 Oct 2017 2:28 PM IST)
t-max-icont-min-icon

விரல் நகத்தின் அளவுடைய இந்த ரோபோ, நூற்றுக்கணக்கான துகள்களின் தொகுப்பு.

மெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் செயற்கை அறிவு ஆய்வக விஞ்ஞானிகளின் தயாரிப்பு இந்த ரோபோ. விரல் நகத்தின் அளவுடைய இந்த ரோபோ, நூற்றுக்கணக்கான துகள்களின் தொகுப்பு.

 ஒவ்வொரு துகளும் ஒன்றிணைந்து குறிப்பிட்ட பணியை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டது. அதாவது தண்ணீரின் மேல் செல்ல வேண்டும் என்றால் துகள்கள் அனைத்தும் தட்டை வடிவில் ஒன்றிணைந்து தண்ணீரில் மிதக்கும். உயரமான இடத்தில் ஏற வேண்டும் என்றால் துகள்கள் ஒன்றன்மேல் ஒன்றாக இணைந்து உயரத்தை கடக்கும். இதுபோல செயற்கை அறிவு மற்றும் கட்டளைகளுக்கு ஏற்ப ஒன்றிணைந்து செயல்படும் இந்த ரோபோ துகள்கள் எதிர்காலத்தில் நிறைய சாதிக்க இருக்கிறது. 

Next Story