சிலந்தி கடிகாரம்
ஆக்டோபஸையும், சிலந்தியையும் நினைவுபடுத்தும் இந்த ரோபோவுக்கு ஆக்டோபாட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
8 கால்களைக் கொண்ட சிலந்தி ரோபோ கடிகாரம் இது. ஆக்டோபஸையும், சிலந்தியையும் நினைவுபடுத்தும் இந்த ரோபோவுக்கு ஆக்டோபாட் என்று பெயரிடப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் இதை நிறுத்திவைக்க முடியும். இதன் தலையை எந்த கோணத்திற்கும் திருப்பி வைத்துக் கொள்ளலாம். துல்லியமாக நேரம் காட்டும். கண்ணாடி போன்ற இதன் உடல் வழியாக இதன் இயக்கத்தை பார்க்கலாம். அறிவியல் புனை கதைகளில் இடம் பெறும் மாய கடிகாரம் போன்ற சுழற்சியை நம் கண்முன் காட்டிக் கொண்டே காலத்தை சுழற்றிக் காட்டுகிறது இந்தக் கடிகாரம். கையடக்கமான இந்த கடிகாரத்தின் விலை ரூபாய் 23 லட்சத்திற்கும் மேல். சுவிட்சர்லாந்தை சேர்ந்த லிப்பி நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
Related Tags :
Next Story