வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை, 3 பேர் கைது


வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை, 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2017 5:00 AM IST (Updated: 5 Oct 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

கட்டப்பனை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கட்டப்பனை,

தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர் முருகன். அவரு டைய மனைவி வசந்தி (வயது 48). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். மற் றொரு மகன் சின்னமனூரில் உள்ள ஒரு பள்ளியில் விடுதி யில், தங்கியிருந்து படித்து வருகிறான்.

இந்தநிலையில் முருகன், இடுக்கி மாவட்டம் கட்டப் பனை வெள்ளாம்குடி பகுதி யில் தங்கியிருந்து தச்சுத் தொழில் செய்து வருகிறார். இதற்காக அந்த பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சம்ப வத்தன்று முருகன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் வசந்தி மட்டும் தனியாக இருந்தார்.

பின்னர் வேலைமுடிந்து முருகன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் கம்பிளி போர்வையால் சுற்றப் பட்ட நிலையில் வசந்தி பிண மாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர், அணிந்திருந்த 3 பவுன் நகைகள், செல்போன் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முருகன், கட்டப் பனை போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த போலீ சார், வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், வசந்தி தலையணையால் அமுக்கி மூச்சு திணற வைத்து கொடூரமாக கொலை செய்யப் பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். அப்போது உத்தமபாளையத்தை அடுத் துள்ள கோம்பையை சேர்ந்த மணிராஜ் என்பவருடைய மனைவி மகா லட்சுமி (47), தனது கூட்டாளிகளான சின்ன மனூரை சேர்ந்த சங்கர் (28), ராஜா (24) ஆகியோருடன் சேர்ந்து வசந்தியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க கட்டப் பனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார், நெடுங்கண்டம் இன்ஸ்பெக்டர் குன்னிபரந் தான் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் களம் இறங்கினர்.

இந்தநிலையில் கொலை யாளிகள் 3 பேரும், சின்ன மனூர் பகுதியில் பதுங்கி இருப் பதாக தனிப்படை போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன் அடிப்படையில் உள்ளூர் போலீசாரின் உதவியு டன் 3 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘கொலை செய் யப்பட்ட வசந்திக்கும், மகா லட் சுமிக்கும் கொடுக்கல்- வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில், மகாலட்சுமிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வசந்தி கொடுக்க மறுத்த தாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது மகாலட்சுமி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

எனவே சம்பவத்தன்று வசந்தியின் வீட்டுக்கு தனது கூட்டாளிகள் 2 பேருடன் சென்ற மகா லட்சுமி அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள் ளார். ஆனால் வசந்தி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், வசந்தியை தலை யணையால் அமுக்கி மூச்சு திணற வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த நகையை பறித்து கொண்டு அவருடைய உடலை கம்பிளி போர்வையால் சுற்றி போட்டு விட்டு தப்பி சென்றனர்’ என்றனர்.

Next Story