ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட மயிலாடுதுறையில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களிடம் ரெயில்வே அதிகாரி ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.
திருச்சி,
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட மயிலாடுதுறையில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களிடம் ரெயில்வே அதிகாரி ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இதில் ஈடுபட்ட ரெயில்வே அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு டி.ஆர்.இ.யு. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு டி.ஆர்.இ.யு. உதவி கோட்ட செயலாளர் சுவாமிநாத யாதவ் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story