கூடுதல் கலவி கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் முகத்தில் வர்ணம் பூசி போராட்டம்
கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, சிதம்பரத்தில் மருத்துவகல்லூரி மாணவர்கள் தங்களது முகத்தில் வர்ணம் பூசி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தி வரும் தற்போதைய சூழ்நிலையில், அதன் கீழ் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணத்தை விட கூடுதலாக மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு மாணவர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும், மருத்துவ கல்லூரியை அரசு ஏற்று நடத்த வேண்டும், மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
மருத்துவ கல்லூரி முன்பு நடத்தி வரும் இவர்களது தொடர் போராட்டம் நேற்று 36-வது நாளாக நீடித்தது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வந்தும், அரசோ அல்லது பல்கலைக்கழக நிர்வாகமோ இதுவரையில் திரும்பி பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் மாணவர்கள்.
இந்த நிலையில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நேற்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அதாவது போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகளில் சிலர் தங்களது முகத்தில் கருப்பு வர்ணம்பூசி, அதில் நீதி என்று எழுதி இருந்தனர். ஒருசிலர் கேள்வி குறிகளையும் எழுதி இருந்தனர்.
இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், நாங்கள் 36 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எங்களுக்கான நீதி இதுவரையில் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் எங்களது படிப்பும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே எங்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக முகத்தில் இதுபோன்று எழுதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழக அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Related Tags :
Next Story