கண்ணமங்கலத்தில் வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கைது கார், கத்தி பறிமுதல்


கண்ணமங்கலத்தில் வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கைது கார், கத்தி பறிமுதல்
x
தினத்தந்தி 5 Oct 2017 4:00 AM IST (Updated: 5 Oct 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலத்தில் வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கைது கார், கத்தி பறிமுதல்

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ஆரணி மெயின் ரோட்டில் அம்மாபாளையம் கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் காரில் அமர்ந்திருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வேலூரை அடுத்த கீழ்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த தஞ்சி (வயது 26), இரும்புலி கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (30), தினகரன் (23), ராஜதுரை (23), கொங்கராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுந்தரவடிவேல் (28) என்பதும், தஞ்சி என்பவர் செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதனையத்து போலீசார் காரையும், அவர்களிடம் இருந்து கத்தியையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.


Next Story