கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை


கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Oct 2017 4:30 AM IST (Updated: 5 Oct 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் ஏரிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கம்,

செங்கத்தை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கும் விண்ணவனூர் கிராமத்தை சங்கீதாவுக்கும் (வயது 30) கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 9 ஒரு வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா கணவரை பிரிந்து மகளுடன் விண்ணவனூர் கிராமத்தில் வசித்து வந்தார். ஆறுமுகம் தனது மகனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சங்கீதா விண்ணவனூர் ஏரிக்கரையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி, சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் கூறுகையில், ‘‘சங்கீதா கழுத்தில் துணி கட்டப்பட்டும், வாயில் நுரை தள்ளியபடியும், கண்கள் வெளியே பிதுங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் பிரேத பரிசோதனை முடிவில் இறப்பிற்கான காரணம் என்பது குறித்து தெரியவரும்’’ என்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story