சாலையில் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் மோதி விவசாயி சாவு


சாலையில் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

கடத்தூர் அருகே சாலையில் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் மோதி விவசாயி பலியானார். இந்த விபத்தில் 8 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

பொம்மிடி,

பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து தர்மபுரிக்கு நேற்று ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. இந்த பஸ் கடத்தூர் அருகே உள்ள கோடியூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத்தொடங்கியது.

அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த அஸ்தகிரியூரை சேர்ந்த முத்து(வயது 50) என்ற விவசாயி மீது அந்த பஸ் மோதியது. பின்னர் அந்த பஸ் சாலையோரத்தில் இருந்த மங்கம்மாள் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் மோதியது. இதில் ஆட்டுப்பட்டியில் இருந்த 8 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

விவசாயி சாவு

இதைத்தொடர்ந்து அந்த பஸ் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதி நின்றது. இந்த விபத்தை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ் மோதியதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய முத்துவை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ஆறுமுகத்திடம்(45) விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story