கரூரில் இருந்து கொடைக்கானல், திருவண்ணாமலைக்கு பஸ் சேவை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
கரூரில் இருந்து கொடைக்கானல் மற்றும் திருவண்ணாமலைக்கு நேரடி பஸ் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கரூர்,
கரூரில் இருந்து ஆன்மிக பயணமாக திருவண்ணா மலைக்கு பக்தர்களும், பொதுமக்களும் அதிக அளவில் செல்வது உண்டு. ஆனால் கரூரில் இருந்து நேரடி பஸ் வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் பக்தர்கள் சேலம் அல்லது திருச்சி சென்று அங்கிருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். இதேபோல கொடைக்கானலுக்கு கரூரில் இருந்து பஸ் வசதி இல்லை.
பொதுமக்கள் கொடைக்கானல் சுற்றுலா செல்ல வேண்டுமானால், திண்டுக்கல்லுக்கு சென்று அங்கிருந்து பஸ்சில் கொடைக்கானல் சென்று வந்தனர். இதனால் கரூரில் இருந்து திருவண்ணாமலை, கொடைக்கானலுக்கு நேரடியாக பஸ் சேவை இயக்க வேண்டும் என பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
3 புதிய பஸ் சேவை தொடக்கம்
இதையடுத்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் கரூரில் இருந்து நேரடியாக திருவண்ணாமலைக்கு 2 பஸ்களும், கொடைக்கானலுக்கு ஒரு பஸ் என மொத்தம் 3 பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கரூரில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதில் 3 புதிய பஸ்களின் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
கரூரில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு ஒரு பஸ் புறப்படும். அந்த பஸ் திருவண்ணாமலைக்கு மதியம் 1.30 மணிக்கு சென்றடையும். இதேபோல திருவண்ணாமலையில் இருந்து மதியம் 2.45 மணி அளவில் புறப்பட்டு கரூருக்கு இரவு 10.15 மணி அளவில் வந்தடையும். மற்றொரு பஸ் கரூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு கரூருக்கு மதியம் 1.55 மணி அளவில் வந்தடையும்.
பஸ் கட்டண விவரம்
இதேபோல கரூரில் இருந்து கொடைக்கானலுக்கு தினமும் காலை 6 மணிக்கு ஒரு பஸ் புறப்பட்டு பகல் 11.30 மணி அளவில் சென்றடையும். கொடைக்கானலில் இருந்து பகல் 12.55 மணி அளவில் புறப்படும் பஸ் கரூருக்கு மாலை 6 மணிக்கு வந்தடையும். புதிய பஸ்களின் சேவையால் பொதுமக்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ் டிக்கெட் கட்டணம் ரூ.150 ஆகும். கரூரில் இருந்து கொடைக்கானலுக்கு ரூ.105 டிக்கெட் கட்டணமாகும். திருவண்ணா மலைக்கு நேற்று இரவு முதல் பஸ் சேவை தொடங்கியது. கொடைக்கானலுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் பஸ் இயக்கப்படுகிறது.
கலந்து கொண்டோர்
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நெரூர் ஆர்.மணிவண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏ.செல்வமணி, கரூர் மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் கே.சி.பி.பரமசிவம், கரூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.செல்வராஜ், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் என்.தானேஷ், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணி, குளித்தலை ஒன்றிய செயலாளர் டி.வி.விநாயகம், தோகைமலை ஒன்றிய செயலாளர் கே.ஆர்.விஜயன், ஒன்றிய துணைசெயலாளர் துரைகவுண்டர், இளைஞர் அணி பொருளாளர் ரெங்கசாமி, கரூர் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் சையது இப்ராகிம். முன்னாள் மாவட்ட பொருளாளர் பேங்க் ஆர்.நடராஜன், ஊரக வளர்ச்சி வங்கி இயக்குனர் வி.சுப்பிரமணியன், கரூர் நகர இளைஞர் அணி செயலாளர் சேரன் பழனிசாமி, இளைஞர் அணி துணை செயலாளர் என்.பழனிராஜ், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆயில் எஸ்.ரமேஷ், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெயின்போ ஆர்.சேகர், ஆண்டாங்கோவில் ஊராட்சி கழக செயலாளர் ரெயின்போ மணிகண்டன், ஸ்ரீ டிராவல்ஸ் கே.என்.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story