விபத்தில் பலியான 2 பேருக்கு நிவாரணம் கேட்டு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்
விபத்தில் பலியான 2 பேருக்கு நிவாரணம் கேட்டு சிறுகனூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமயபுரம்,
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் லாசர் மகள் செல்சியாராணி (வயது 18). அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அண்ணா நகரை சேர்ந்த தனபால் மகள் இலக்கியா (18). இவர்கள் இருவரும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூரில் உள்ள எம்.ஏ.எம். என்ற தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு சென்று விட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதிக்கு வந்தனர். பின்னர் கல்லூரிக்கு எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக இருவரும் சாலையை கடக்க முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் மாணவிகள் இருவரும் உடல் நசுங்கி இறந்தனர். இந்த சம்பவம் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வாசல் முன்பாக 2 மாணவிகளின் உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் கல்லூரிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக தீர்வு எதுவும் ஏற்படவில்லை.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மூன்றாம் ஆண்டு மாணவி குன்சனாப்பர் கூறுகையில், இந்த கல்லூரியின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் போதுமான மின் விளக்கு வசதி கிடையாது. சாலையை கடந்து பஸ் ஏறும் எங்களை போன்ற மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இது சம்பந்தமாக கல்லூரி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் உரிய நடவடிக்கை எடுக்க பலமுறை சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் முதல்கட்டமாக எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். விபத்தில் பலியான மாணவிகளின் குடும்பத்திற்கு கல்லூரி நிர்வாகமும், அரசும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
இதை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல்வரின் அறையை முற்றுகையிட்டு நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த உள்ளிருப்பு மற்றும் முற்றுகை போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கல்லூரியின் சேர்மன் எம்.ஏ.மாலுக் முகமது மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதன் பின்னரே போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு திரும்பினர்.

Related Tags :
Next Story