மாணவ–மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணுவது பற்றிய நிகழ்ச்சி


மாணவ–மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணுவது பற்றிய நிகழ்ச்சி
x
தினத்தந்தி 5 Oct 2017 4:00 AM IST (Updated: 5 Oct 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவ–மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணுவது பற்றிய நிகழ்ச்சி நீல திமிங்கல விளையாட்டு குறித்தும் விழிப்புணர்வு

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு தொடக்கப்பள்ளி மாணவ– மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரி கலாவதி தலைமை தாங்கி பேசினார். நீல திமிங்கலம் விளையாட்டால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக இடைநிலை ஆசிரியர் அந்தோணிமுத்து அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பள்ளி தலைமை ஆசிரியை கமலா டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் கழிவறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுவது? என்பது பற்றிய விளக்கமும், செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.


Related Tags :
Next Story