குமரன்குடி வங்கி கிளையை மூடும் முயற்சியை கைவிடக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
செங்கோடி அருகில் உள்ள குமரன்குடி வங்கி கிளையை மூடும் முயற்சியை கைவிடக்கோரி நாகர்கோவிலில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் குமரன்குடி ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையை மூடப்போவதாக தகவல் பரவி வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த வங்கி கிளையை மூடக்கூடாது என வலியுறுத்தி குமரன்குடி அனைத்து கட்சி போராட்டக்குழு சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் வீதியில் உள்ள அந்த வங்கியின் வட்டார வணிக அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஊர் நிர்வாகி செல்வம் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், அ.தி.மு.க. சார்பில் செல்லப்பன், காங்கிரஸ் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது, தே.மு.தி.க. மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெகநாதன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வைகுண்டதாஸ், அந்தோணிமுத்து, ஜெகன்ராஜ், அசோக்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, நிர்வாகிகள் சகாய ஆன்றனி, வில்சன், சுந்தர்ராஜ், தங்கராஜ், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
முடிவில் கோரிக்கை அடங்கிய மனு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல மேலாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story