குடிபோதையில் ‘ஜீப்’ ஓட்டிய போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
மும்பை போரிவிலி எம்.எச்.பி. போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்து வந்தவர் அங்குஷ் சனாப். இவர் சம்பவத்தன்று போலீஸ் ‘ஜீப்’பை சாலையில் தாறுமாறாக ஓட்டிச்சென்றார்.
மும்பை,
மும்பை போரிவிலி எம்.எச்.பி. போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்து வந்தவர் அங்குஷ் சனாப். இவர் சம்பவத்தன்று போலீஸ் ‘ஜீப்’பை சாலையில் தாறுமாறாக ஓட்டிச்சென்றார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் சிலர் சந்தேகம் அடைந்து ‘ஜீப்’பை விரட்டி சென்று மடக்கினர். இதில், போலீஸ்காரர் அங்குஷ் சனாப் குடிபோதையில் ‘ஜீப்’பை ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.எச்.பி. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸ்காரர் அங்குஷ் சனாப்பை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணையும் நடந்து வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் அங்குஷ் சனாப் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம், உதவி போலீஸ் கமிஷனர் பரிந்துரை செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் குடிபோதையில் ஜீப்பை ஓட்டிய போலீஸ்காரர் அங்குஷ் சனாப்பை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தத்தாராய் பட்சல்கிகர் உத்தரவிட்டார்.